சற்று முன்
Last updated:
May 9, 2017, 5:19 pm

இரவில் 11 ஆம் வகுப்பு மாணவியை கூட்டு பலாத்காரம் செய்ய முயன்றவர்களை வேட்டையாடிய இளைஞர்கள், மண்டியிட வைத்து ரோட்டில் நடக்க விட்ட பெண்கள் – காணொளி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அந்தனூர் கிராமத்தில் 11 ஆம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர்களை பேரை இளைஞர்களே பிடித்து அடித்து உதைத்து துவைத்து எடுத்துள்ளனர், மேலும் அந்த குற்றவாளிகளை பெண்கள், துடைப்ப கட்டையால் அடித்து தரையில் மண்டியிட்டு நடக்க விட்டுள்ளனர்.

அந்தனூர் கிராமத்தில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி , இரவில் இயற்கை தேவைகளை நிறைவேற்ற சென்றுள்ளார், அப்பொழுது அங்கு இருந்த 4 பேர் அந்த மாணவியின் வாயில் துணியை வைத்து கடத்தி சென்று பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். இதை பார்த்த பாட்டி ஒருவர் சத்தம் போட்டுள்ளார். இதை தொடர்ந்து இளைஞர்களே அந்த குற்றவாளிகளை பிடித்து தர்ம அடி கொடுத்து போலிசில் ஒப்படைத்துள்ளனர். அந்த மாணவி பத்திரமாக காப்பாற்றப்பட்டுள்ளார்.

இதில் 2 பேர் தப்பித்துள்ளனர், அவர்களை பொதுமக்கள் தேடி வருகின்றனர்.