35 வயதாகியும் திருமணம் செய்து வைக்காததால் தாயை கழுத்தை அறுத்து கொலை செய்த மகன்

அரியலூர் அருகே திருமணம் செய்துவைக்க தாமதித்ததால் பெற்ற தாயை மகன் கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

அரியலூர் மாவட்டம் கீழகொளத்தூர் கிராமத்தை சோந்த பெருமாள், பாப்பாத்தி தம்பதியின் இளைய மகன் சதானந்தத்திற்கு 35 வயதாகியும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் தனக்கு பக்கத்து ஊரில் உள்ள பெண்ணை திருமணம் செய்து வைக்க நேற்று மாலை தனது அப்பா மற்றும் அம்மாவிடம் சதானந்தம் வலியுறுத்தியுள்ளார்.

அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சதானந்தம் தனது தாய் பாப்பாத்தியின் தலையை கத்தியால் அறுத்து உடலை இரண்டாக பிளந்து கொடூரமாக கொலை செய்தார். இதனை தடுக்க சென்ற அவரது தந்தையை கத்தியால் குத்த வந்ததால் அவர் வீட்டை விட்டு வெளியே ஓடினார்.

murder_8

இந்த கொடூர சம்பவம் குறித்து தகவல் அறிந்துவந்த கீழப்பழுவூர் போலீசார் சதானந்தத்தை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். திருமணம் ஆகாததால் மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பெற்ற தாயை சதானந்தம் கொன்றதாக போலீசார் தெரிவித்தனர்.