சற்று முன்
Last updated:
May 10, 2017, 5:12 pm

தலித் இனத்தை சேர்ந்தவரை அடித்தே கொன்ற பிஜேபி ஆளும் சத்திஸ்கர் மாநில போலிஸ் , 3 போலிஸ் சஸ்பண்ட் – அதிர்ச்சி காணொளி

பிஜேபி ஆளும் சத்திஸ்கர் மாநிலத்தில் தலித் வாலிபர் ஒருவர் போலிஸ் நிலையத்தில் அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் செய்த குற்றம், ”மின் ட்ரான்ஸ்ஃபாம் சரியில்லை அதனால் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுகின்து என பிஜேபி ஆளும் அரசாங்க அதிகாரியிடம் புகார் கூறியது” தான்.

கொலை செய்யப்பட்டவரின் பெயர் சதீஸ் குமார், ஜன்ஜிர் ஜம்பா மாவட்டத்தில் உள்ள முல்முலா காவல் நிலையத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

மின்சார வாரியம் இவர் மீது போலிசில் புகார் அளித்துள்ளது. அதற்காக இவரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து அடித்தே கொலை செய்து விட்டனர் எனக் கூறி இறந்தவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட்னர்.

இதனை தொடர்ந்து 3 போலிசாரை சஸ்பன்ட் செய்துள்ளனர். சஸ்பன்ட் செய்வது தான் தண்டனையா.