பள்ளர் சமுதாயத்தை பலி கொடுக்கும் கிருஷ்ணசாமி! சதிவலையில் பாஜகவா??

103

 

பள்ளர் சமுதாயத்தை பலி கொடுக்கும் கிருஷ்ணசாமி!

 

நியூஸ்7 தொலைக்காட்சியில் இந்த வார வியூகம் நிகழ்ச்சியில் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் பேட்டியைப் பார்த்தவர்கள் ஒரு கணம் அதிர்ந்துதான் போனார்கள்.

தலித் சமுதாயத்திற்காக பல கட்சிகள் இருக்கின்றன. பறையர் சமுதாய மக்களுக்கு திருமாவளவன் போல, வன்னியர்களுக்கு ராம்தாஸ் போல, அருந்ததியர்களுக்கு ஜான்பாண்டியனைப் போல, பள்ளர் சமுதாய மக்கள் டாக்டர் கிருஷ்ணசாமியை தங்களின் சமுதாயப் பாதுகாவலராக நினைத்துக் கொண்டுள்ளனர்.

ஆனால் இந்த கிருஷ்ணசாமி என்பவர் ஒரு படா கிரிமினல் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. ஒரே ஒரு உதாரணத்தைச் சொல்வதென்றால் மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்கள் பிரச்சினை. நெல்லை மாவட்டம் மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர் சம்பள உயர்வு பிரச்சினையை தன் கட்சியை வளர்ப்பதற்கு பயன்படுத்திக் கொண்டார் கிருஷ்ணசாமி.

கிருஷ்ணசாமியை நல்லவர் என நம்பி மாஞ்சோலை பள்ளர் இன மக்கள் புதிய தமிழகம் கட்சியின் குடையின் கீழ் அணிதிரண்டனர். மாஞ்சோலையில் இருந்த அனைத்து தொழிற்சங்கங்களும் கலைக்கப்பட்டது.

புதிய தமிழகம் தொழிற்சங்கம் அமைக்கப்பட்டு தேயிலை தோட்ட நிர்வாகத்தை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தப்பட்டது. கருணாநிதி ஆட்சியில் காவல்துறை பல அராஜகங்களை மேற்கொண்டது. பல அப்பாவிகள் அநியாயமாக கைது செய்யப்பட்டார்கள். அதைக் கண்டித்து 1999 ஆம் வருடம் ஜூலை 23 ஆம் தேதி தாமிரபரணி நதிக்கரையில் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் மாஞ்சோலை மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்ட பேரணி நடத்தப்பட்டது. கிருஷ்ணசாமி, ஜே.எம்.ஹாரூன் உள்ளிட்ட தலைவர்கள் ஒரு ஜீப்பில் வலம் வர மக்கள் நடந்து வந்தார்கள்.

காவல்துறை குவிக்கப்பட்டிருந்தது. ஒரு கட்டத்தில் காவல்துறையினர் கூட்டத்தை நோக்கி தடியடி நடத்தி கூட்டத்தை தாமிரபரணி ஆற்றுக்குள் தள்ளிவிட்டார்கள். பலரும் தண்ணீரில் தத்தளிக்க அவர்கள் மீது கற்களை வீசியது காவல்துறை. கடைசியில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இதெல்லாம் நடக்கும் முன் கிருஷ்ணசாமிக்கு தடியடி நடத்தப் போகிறார்கள் என்ற தகவல் கிடைக்க அந்த இடத்தில் இருந்து எஸ்கேப் ஆகின்றார்.

எல்லாம் முடிந்து திரும்பி அங்கே வந்து இறந்து போன உடல்களைப் பார்த்து நீலிக்கண்ணீர் வடிக்கின்றார் கிருஷ்ணசாமி. இந்த தடியடிக்கு முழுக்காரணம் திமுக அரசுதான் என்று குற்றம்சாட்டினார் கிருஷ்ணசாமி. அவர் மட்டுமல்ல! அதிகபட்சமானவர்கள் திமுக மீது கருணாநிதி மீது குற்றம் சாட்டினார்கள். கருணாநிதியைப் பொருத்தவரை தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் ஒன்றாகச் சேர்வதை எப்போதுமே விரும்ப மாட்டார். மாஞ்சோலை மக்கள் முழுவதும் கருணாநிதியை நோக்கி சாபத்தை விட்டார்கள்.

அதன்பிறகு என்ன நடந்தது தெரியுமா?

அடுத்து 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் இணைகின்றது புதியதமிழகம். கிருஷ்ணசாமி யாரை துரோகி என்றாரோ, மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்கள் 17 பேர் தாமிரபரணியில் மூழ்கிச் சாவதற்கு யார் காரணம் என்றாரோ, அதே கருணாநிதியிடம் 10 சீட்டுக்களையும் சில பெட்டிகள் நோட்டுக்களையும் வாங்கிக் கொண்டு கூட்டணி சேர்ந்து தலித்துகளின் காவலர் கருணாநிதிதான் என்று வீர வசனம் பேசினார் கிருஷ்ணசாமி.

அப்போதுதான் தேவேந்திரகுல வேளாள மக்கள் கிருஷ்ணசாமியின் அயோக்கியத்தனத்தைப் புரிந்து கொண்டனர், இவர் நம் சமுதாய முன்னேற்றத்திற்காகப் போராடவில்லை. அவரது முன்னேற்றத்திற்காக நம்மை பலியாக்கி போராடிக் கொள்கின்றார் என்பதை மக்கள் தெரிந்து 2001 ஆம் ஆண்டுத் தேர்தலில் கிருஷ்ணசாமிக்கு கடுமையான செருப்படி தோல்வியைக் கொடுத்தார்கள் மக்கள். அந்தக் கூட்டணியில் திமுகவுடன் பாஜகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்பேர்பட்ட கிருஷ்ணசாமி இன்றைக்கு பாஜகவின் செருப்புக்காலை நக்கிக் கொண்டு பாஜக தூக்கி வீசும் எலும்புத்துண்டைக் கவ்விக் கொண்டு சொல்கின்றார், தலித் மக்களுக்கு பாதுகாப்பென்றால் அது பாஜகவால் மட்டும்தான் முடியும் என்று. பள்ளர்கள் மாட்டிறைச்சி சாப்பிட மாட்டார்கள் என்று சொல்கின்றார்.

கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகமிக பின்தங்கியுள்ள பள்ளர் சமுதாய மக்களின் தலைவர் கிருஷ்ணசாமி சொல்கின்றார், இட ஒதுக்கீடு இனி மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று, பத்தாயிரம் மக்களில் வெறும் பத்து பேர் பள்ளர் சமுதாய மக்கள் டாக்டராக வருவதையும் தடுத்து நிறுத்த காங்கிரஸால் அறிமுகப்படுத்தபட்டு பயங்கரவாத பாசிச பாஜகவால் பற்றிப் பிடிக்கப்படும் நீட் தேர்வுதான் சிறந்தது என்று பாஜகவிற்கு சொம்படிக்கிறார் தலித்துகளின் தலைவர் கிருஷ்ணசாமி.

அந்த நீட் தேர்வில் நடந்த கூத்துக்களையும் தமிழகத்தில் மட்டும் மாணவ மாணவிகள் எப்படியெல்லாம் கேவலப்படுத்தப்பட்டார்கள் என்பதையெல்லாம் பார்த்து பாஜகவை நோக்கி உலகமே காரித்துப்புகின்றது. தமிழகத்தில் மட்டும் மாணவ மாணவிகளின் தன்மானத்துடன் விளையாடி ஆடையைக் கழற்றச் சொல்லி சட்டைகளை வெட்டி அவமானப்படுத்தப்பட்ட நிகழ்வை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டன அறிக்கை விடுத்தும் பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது. ஆனால் தலித் சமுதாய மக்களுக்கு மட்டுமல்ல! தமிழக மக்களுக்கே எதிராக கொண்டுவரப்பட்ட நீட் தேர்வை அவசியம் என்று லாவணி பாடுகின்றார் கிருஷ்ணசாமி.

பசுமாடுகளைப் பாதுகாக்க கோசாலைகள்தான் சரியான இடம் என்று சொல்லி அப்பாவி விவசாயிகளை ஏமாற்றி பசுமாடுகளைக் கூட்டிச்சென்று கோசாலையில் அடைத்து விட்டு பின்னர் அதை பின்பக்கமாக கேரளாவிற்கு ஏற்றுவதைப் போல, பள்ளர் சமுதாய மக்களுக்கு பாஜகதான் பாதுகாப்பு என்று சொல்லி பள்ளர் சமுதாய மக்களை பாஜகவினரிடம் பாகுபலி கொடுக்கத்தயாராகி விட்டார் கிருஷ்ணசாமி.

பாஜகவை வானளாவ புகழும் இந்த கிருஷ்ணசாமி, ஒருமுறை ஒரேமுறை சங்கரமடத்திற்குச் சென்று பெரியவா சுப்ரமணி சங்கராச்சாரியுடன் ஒரே இலையில் சாப்பிட வேண்டும், சங்கராச்சாரியார் கக்கா போன வாழை இலையை எடுத்து வெளியே போடுவதற்கு கிருஷ்ணசாமிக்கு அனுமதியிருக்கின்றதா?

பள்ளர் இன மக்கள் ஏற்கனவே படுகுழியில் கிடக்கின்றார்கள். இந்த கிருஷ்ணசாமியை நம்பினால் ஆழக்குழி தோண்டி புதைத்தே விடுவார். கவனம் மக்களே!

#பாஜகவே_வெளியேறு!