தாக்குதல் நடத்தியதாக இந்தியா கூறுவது வெள்ளை பொய் – பாக் இராணுவம்

இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் பகுதிகளில் தாக்குதலே நடத்தப்படவில்லை மோடி அரசு வெள்ளை போய் சொல்கின்றது என பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்ட இடங்களுக்கு சர்வதே செய்தியாளர்களை அழைத்து கொண்டு போய் நேரடியாகவும் அந்த இடங்களை காட்டியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்ளையும் வெளியிட்டுள்ளது. (காணொளி செய்தியின் இறுதியில் இடம் பெற்றுள்ளது)

இது குறித்த செய்தியை AFP என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதை Times of india, Hindustan Times உள்ளிட்டவைகள் தற்போது வெளியிட்டுள்ளது.

http://www.hindustantimes.com/india-news/incursions-impossible-pak-military-insists-after-india-s-surgical-strikes/story-OHbTD8CoNfaY6CvjC7bryJ.html

timesofindia.indiatimes.com/india/Pakistan-army-flies-media-to-Line-of-Control-to-prove-no-surgical-strikes-by-India/articleshow/54639720.cms

 

மேற்கண்ட இணைப்பில் உள்ள செய்தியின் சுருக்கம் தமிழில்:

இந்தியா பாகிஸ்தானின் மீது நடத்தியதாக சொல்லப்படுவது ஒரு வெள்ளைப் பொய் என்று சொல்லியுள்ளது பாக் ராணுவம். அது மட்டுமின்றி இப்படி நடக்க வாய்ய்ப்பேய் இல்லை என்றும் அறிவித்துள்ளது. அதை நிரூபிக்க 20 செய்தி அமைப்புகளை (சர்வதேச செய்தி அமைப்புகள் உட்பட) சார்ந்த 40 செயதியாளர்களை தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்படும் இடத்திற்கு அருகில் உள்ள எல்லைக்கு அழைத்துச்ச்சென்றுள்ளது.

இந்த தகவலை உறுதிப்படுத்த முடியாவிடிலும், வேறொரு நேரத்தில் சென்ற பிரெஞ்சு பத்திரிக்கையாளர்களிடமும் அதை சுற்றியுள்ள கிராமத்தார்கள் இப்படிப்பட்ட தாக்குதல் நடந்திருப்பதாக சொல்லப்படுவது நம்ப முடிவதாக இல்லை என்று பிரெஞ்சு செய்தி அமைப்பிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளது. இதையே உள்ளூர் செயதியாளராகளும் தெரிவிப்பதாக பிரெஞ்சு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தற்போதைய காஷ்மீர் பிரச்சினையை திசை திருப்ப இப்படி சொல்லப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்திய அரசாங்கம் தாக்குதல் நடத்தியதற்குரிய வீடியோ மற்றும் புகைப்படங்களை இதுவரை வெளியிடாத நிலையில் தற்போது இந்த செய்தி வெளியானது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா தாக்குதல் நடத்தியதா இல்லையா, பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுவது உண்மையா போய்யா என்பது குறித்து நாம் விவாதிக்க விரும்பவில்லை. செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தியை அப்படியே பொதுமக்களின் பார்வைக்கு வைக்கின்றோம்.

காணொளி