சற்று முன்
Last updated:
May 9, 2017, 5:19 pm

District

 • பெரியார், அம்பேத்கர் உருவப்படம் அணிந்து போராட்டம்: 4 பெண்கள் உள்பட 32 பேர் கைது

  - Jun 4, 2015
  சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 32 பேர் கைதுசெய்யப்பட்டனர். தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அம்பேத்கர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு மாணவர் மன்றம் உள்ளிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் பெரியார், அம்பேத்கர் உருவப்படத்தை முகத்தில் அணிந்து...
 • தூத்துக்குடி எஸ்பிக்கு உயர்நீதிமன்றம் பிடிவாரண்ட்

  - Jun 4, 2015
  வழக்கில் ஆஜராகாத தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை பிடிவாரண்ட் பிறப்பித்தது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூரைச் சேர்ந்த எம்.செல்வம் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரும் மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரண் இவ்வாறு உத்தரவிட்டார். மனுவில், சிவகங்கை மாவட்டம் நெல்முடிக்கரை மற்றும் பானாங்குளம்...
 • மதுரையில் அதிமுக வட்டச் செயலர் வெட்டிக் கொலை

  - Jun 4, 2015
  மதுரையில் அதிமுக வட்டச் செயலர் ராஜேந்திரன் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மதுரை வெங்கடாசலபுரம் 3-ஆவது தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). மாநகர் மாவட்ட அதிமுகவில் 77-ஆவது வட்டச் செயலராக கடந்த 7 ஆண்டுகளாக இருந்து வந்தார். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர் 77-ஆவது வட்ட மாமன்ற உறுப்பினராக உள்ளார்....
 • பூட்டிய வீட்டுக்குள் அக்காள்- தம்பி கொலை: தந்தை தலைமறைவு

  - Jun 4, 2015
  சென்னை மதுரவாயலில் பூட்டிய வீட்டுக்குள் அக்காள் – தம்பி கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், அழுகிய சடலங்களாக போலீஸார் புதன்கிழமை மீட்டனர். சென்னை மதுரவாயல் எம்.எம்.டி.ஏ. செக்டர் 1 வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் வசிப்பவர் ரவி. இவர் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குரைஞராக உள்ளார். ரவியும்,...
 • கடை கதவுப் பூட்டை உடைத்து பணம் திருட்டு

  - Jun 4, 2015
  சென்னை கோயம்பேட்டில் கடை கதவுப் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கோயம்பேடு 100 அடி சாலை மேம்பாலம் அருகே திருமண அழைப்பிதழ்கள் கடை உள்ளது. இந்தக் கடையை செவ்வாய்க்கிழமை இரவு ஊழியர்கள் வழக்கம்போல பூட்டிச் சென்றனர். புதன்கிழமை காலை கடையைத் திறக்க...