கூட்டணி குறித்து தமிழிசை புதிய விளக்கம்

தமிழகத்தில் மக்களுக்கு நன்மை செய்யும் கட்சிகளோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள கள்ளபிரான்புரம் கிராமத்தில் பிரதம மந்திரியின் விவசாய பயிர் காப்பீட்டு திட்டத்தினை தமிழிசை சௌந்தர்ராஜன் துவக்கி வைத்தார் அப்போது பேசிய அவர், காப்பீடு செய்த பயிர்கள் சேதமடைந்தால் செல்போனில் படம் எடுத்து அனுப்பினால் கூட, உடனடியாக 25 சதவீதம் செலவு தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எவ்வித தடையும் வராமல் நிரந்தரமாக நடத்த பிஜேபி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் மக்களுக்கு எந்த கட்சி நல்லது செய்யுமோ அந்த கட்சியோடு கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திப்போம் எனவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

tamilesaisow

அதிமுகவுடன் எப்படியாவது ஒட்டிக் கொள்ளலாம் என பல வித்ததிவல் நூல் விட்டு பார்த்தது பாஜக. ஆனால் ஜெயலலிதா பாஜகவை இதுவரை சீண்டிக் கூட பார்க்கவிலை் என்பதால் பாஜக இது போன்று கூறியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.